11.08.2013

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொடிச் சேலை எடுத்துச் செல்லும் நிகழ்வு (படங்கள்)


நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொடிச் சேலை எடுத்துச் செல்லும் நிகழ்வு (படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சேலை ஆலயத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு இன்று (11) காலை 8 மணியளவில் இடம்பெற்றது.

நல்லூர் ஆலய பெருந்திருவிழா நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக வருடம் தோறும் ஆலயத்திற்கு சம்பிரதாய பூர்வமாக கொடிச் சேலை எடுத்து செல்லப்படும்.

சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள கொடித்தேர் மடத்தில் எழுந்தருளி இருக்கும் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் புடைசூழ சித்திர தேரில் கொடிச் சேலை ஏற்றப்பட்டு நல்லூர் ஆலயத்திற்கு சித்திர தேர் இழுத்து செல்லப்படும்.

நல்லூர் ஆலயத்தை தேர் சென்றடைந்ததும் கொடிச் சேலை இறக்கப்பட்டு செங்குந்தர் மரபில் வந்தவர்களால் தலையில் சுமந்து சென்று கொடிச் சேலை ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்படும்.

(அத தெரண - நிருபர்)
(நன்றி-AD) G.JKMEDIAWORKS 2013