27.08.2013

கிருஷ்ணஜெயந்தி பூஜை முறையும் பலனும்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNktL8ZeH_bMYqOHDWjTm8Db_S95-RIdHVhe_9piHhR2zVe_eoHgCTnJnZx7-c1NMu7A3QchGUdbHjEwhjQP3LxzQ7uoqHeJWpDVj50s3bSJdmevmQ6AYzDaM3LalA2qQmxwPwKwtGjwE/s400/image004.jpg
கிருஷ்ணஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும்.  கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று அவருக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்<யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்.
பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமி<யான மதுரா வாழ் மக்கள், அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள். யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறு கரையில் கோகுலமும் அமைத்துள்ளது. அதனால், அன்று யமுனைக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்வார்கள்.